

பிருந்தா சீனிவாசனின் ‘ஒவ்வோர் அழைப்பிலும் ஓர் உயிர்’ கட்டுரை படிக்கப் படிக்க ரொம்பவே பிரமிப்பாக இருந்தது. சாலைகளில் பெரும் சத்தத்துடன் பறந்து செல்லும் ஆம்புலன்ஸைப் பார்க்கும்போதெல்லாம், அடி வயிறு கலங்கும். ‘கடவுளே, இதில் செல்லும் நோயாளி பிழைத்தெழ வேண்டும்' என வேண்டிக்கொண்டதோடு சரி. ஆனால், அந்த சேவையை மருத்துவம், காவல், தீயணைப்பு ஆகிய மூன்று துறையினரும் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதுடன், அதன் பின்னரும் நோயாளிகளின் நிலையை விசாரித்துத் தெரிந்துகொள்வதும் வியப்பூட்டும் செய்தி. மிதமிஞ்சிய வேகத்துடனும், குடித்துவிட்டும், போட்டிபோட்டுக்கொண்டும் வாகனம் ஓட்டுபவர்கள் ஒரு கணம் யோசிக்க வேண்டும், பிறர் உயிர் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தார் நலனும் அதில் அடங்கியிருக்கிறது என்பதை. யோசியுங்கள், சாலைகளை இனிமேலும் கல்லறைகளாக்க வேண்டுமா?
- ஜே. லூர்து,மதுரை.