

எபோலா நோய் பற்றிய செய்தியின் தாக்கமே இன்னமும் மக்களிடம் சென்றடையாமல் இருக்கும் நிலையில், மார்பெர்க் பற்றிய செய்தி பேரதிர்ச்சியாக இருக்கிறது. முதலில், எபோலா மற்றம் மார்பெர்க் போன்ற நோய்கள் தொடர்பாக, தகுந்த மருத்துவர்கள் மூலம் கிராமத்தில் பணியாற்றும் செவிலியருக்குப் பயிற்சி அளித்து, அவர்கள் மூலமாக இந்நோய் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதுதான் இந்நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியது மிக முக்கியமான காரியம். வருமுன் காப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்தாலே நாம் அந்நோயின் தீவிரத்தில் பாதி ஜெயித்துவிட்டாதாகக் கருதலாம்.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.