

‘கமல்: தமிழ் சினிமாவின் ராஜபார்வை' கட்டுரை, அகவை 60-ஐத் தொடும் கமலுக்குச் சிறப்பான வாழ்த்து. இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞர்களுள் ஒருவர் கமல். உலகத் தரத்திலான சினிமாவை கமலால் ஏன் கொடுக்க முடியவில்லை என்ற கேள்விக்குக் கட்டுரை சிறப்பான பதிலை அளித்திருக்கிறது. “கலைப் படம் என்பது ஒரு கெட்ட வார்த்தை” என கமல் ஒருமுறை குறிப்பிட்டார். இது சற்று மிகையான ஒன்றாக இருந்தாலும், கட்டுரையில் குறிபிட்டதுபோல, கமல் வெகுஜன மக்கள் ரசிக்கும் தரமான நடிப்பை வழங்கினார் என்பது மறுக்க முடியாதது. “100 வருடங்கள் கழித்து ‘உலகத் திரைப்படச் சரித்திரம்' என ஒரு புத்தகம் வெளியாகுமேயானால், அந்தப் புத்தகத்தின் ஓர் மூலையில் ‘கமல்ஹாசன் என்றொரு நடிகர் இருந்தார்’ என்று போட்டால் அதுவே எனக்குப் போதும்” எனப் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார் கமல்.
- ப. சுகுமார்,தூத்துக்குடி.