

சாந்தகுமாரி சிவகடாட்சம், ரிலாக்ஸ் பகுதியில் 'அதிசய உணவுகள்' என்ற தலைப்பில் எழுதத் துவங்கியுள்ள பயணக் கட்டுரை, சுவையான விருந்துகளைப் பரிமாறும் என்று எண்ணுகிறேன்.
இந்த வாரம், தாய்வான் உணவு வகைகளில் கடல் உணவுத் தயாரிப்புகளை வழங்கும் இரவு உணவு விடுதிகளைப் பற்றி யதார்த்தமான நடையில் சுவைபட எழுதியுள்ளார். பயண நூல்களை எழுதி தமிழ்நாடு அரசின் விருதுகளைப் பெற்றுள்ள இவருடைய தொடர் கட்டுரைகளைப் படிக்கப் பெரிதும் ஆவலாக இருக்கிறோம்.
- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.