

விளையாட்டு என்று அரசியல்வாதிகள், வியாபாரிகள் கைகளில் சிக்கியதோ அன்றே ஊழல் மலிந்து விட்டதற்கு ஐ.பி.எல். கிரிக்கெட் ஓர் உதாரணம். 20 ஓவர் கிரிக்கெட் எந்த அளவுக்குப் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டதோ, அதே அளவுக்கு மேட்ச் பிக்ஸிங் நடத்துபவர்களுக்கும் இருமடங்கு கொண்டாட்டத்தை அள்ளித்தந்தது.
மைதானத்தையும் தாண்டி, கடல் எல்லையையும் தாண்டி நடந்த சூதாட்டத்தைத் தடுக்கத் தவறியது பிசிசிஐ. நடந்துவரும் சம்பவங்கள், கிரிக்கெட் விளையாட்டின் ஊழலை மழுங் கடித்துவிட்டதையே காட்டுவதுடன், உண்மையை அம்பலப்படுத்துமா என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளன.
- கி. ரெங்கராஜன்,சென்னை.