

ரெஹானா ஜப்பாரியின் கடைசி வேண்டுகோளை அனைவரும் குறிப்பாக பெண் குழந்தையைப் பெற்றவர் எவரும் ஒரு துளி கண்ணீர் சிந்தாமல் வாசிக்க இயலாது. இந்த நேரத்தில் நம் தேசப் பிதா சொன்னதை நினைக்காமல் இருக்க இயலவில்லை. ஒரு பெண்ணுக்கு எவரேனும் களங்கம் விளைவிக்க முயன்றால், அந்தப் பெண் தன்னைப்
பாதுகாத்துக்கொள்ள எவ்வித ஆயுதத்தை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கிடைக்காத பட்சத்தில் தன்னிடமுள்ள கூரிய நகங்கள், பற்களைப் பயன்படுத்தலாம். அஹிம்சாமூர்த்தியின் இத்தகைய கூற்றை ‘நீதிமானின் கையில் இருக்கும் ஆயுதம் கடுந்தண்டனையையே கொடுக்கும்’ என்ற பின்னணியில் கவனிக்க வேண்டும். ஈரானில் ரெஹானாவைப் புதைக்கவில்லை; விதைத்திருக்கிறார்கள்.
- பி. சந்தானகிருஷ்ணன்,தஞ்சாவூர்.