

‘தி இந்து’ நாளிதழின் (12.11.14), பூச்செண்டு பகுதியில், புகழ்பெற்ற பறவை ஆராய்ச்சியாளர் சலீம் அலி பற்றிய தொகுப்புரை படித்தேன். நேற்று அவருடைய நூல் பற்றிய கருத்துரு படித்தேன். அந்த நூலில் பறவைகளைப் பார்த்துக்கொண்டே திபெத்தில் இமயமலைப் பகுதியில் விழ இருந்ததைப் படித்தபோது, எப்படிப்பட்ட ஒரு ஈடுபாடு இருப்பின், தன்னை மறந்த நிலையில் அவர் அந்தப் பணியைச் செய்திருப்பார் என்பதை உணர முடிந்தது.
அவருடைய பிறந்த நாளில் அவரைப் பற்றிய அரிய விஷயங்களைத் தொகுத்து அளித்துள்ளீர்கள். இதுபோன்ற சாதனை மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வசதியாக கல்லூரி மற்றும் பள்ளிப் பாட நூல்களில் இடம்பெறச் செய்ய வேண்டும். இயற்கையின் அருமையை அறிந்த இவரைப் போன்றவர்களின் அனுபவங்கள் இன்றைய இளைஞர் களுக்குப் பாடமாக அமைதல் நலம்.
- ஜீவன்.பி.கே.கும்பகோணம்.