

எங்களில் ஒருவர் ‘கமல்: தமிழ் சினிமாவின் ராஜபார்வை’ உண்மை. பாரதியின் கோபம் அவரிடம் இருக்கிறது. அவரின் குறிக்கோளும் பாரதியைப் போன்றதே. நாட்டுக்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று அவர் வழியிலேயே கமலும் கலையைக் கலைக்காகவே செய்கிறார். அதை வைத்து அரசியலுக்கு முயற்சிக்கவில்லை. வேறு தொழில்களில் முதலீடு செய்யவில்லை. தெரிந்த துறையை மேலும் தெரிந்துகொள்ள உழைக்கிறார். என் போன்றவர்கள் அவரை சிவாஜியின் கலையுலக வாரிசாகவும் கலைமகளின் செல்லப் பிள்ளையாகவுமே நினைக்கிறோம். என்றும் அவர் எங்களில் ஒருவர்.
- சீ. குமார்,சிக்கல்.