

இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்துக்குப் பின்னுள்ள கடின உழைப்பையும், அதற்காகச் செலவிடப்பட்ட கால அளவையும் இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில், அச்சட்டம் ஒப்புதல் பெற்ற நாளில் தொகுத்து வெளியிட்ட, ‘தி இந்து’வின் பணி பாராட்டுக்குரியது.
பல தடைகளையும் கடந்து இந்தியா ஒரு இறையாண்மை மிக்க, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாகத் திகழ்கிறது. நமது அரசியல் சட்டம்தான் இந்தியாவின் பன்முகத்தன்மையையும் அதன் ஜனநாயக அமைப்புகளையும் வலுவாகப் பாதுகாத்துவருகிறது. நெகிழ்வுத்தன்மையும் உறுதியும் ஒருங்கே அமையப்பெற்ற அரசியல் சட்டத்தை உருவாக்கப் பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரையும் அதற்குத் துணை நின்ற தலைவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்வோம்.
- மருதம் செல்வா,திருப்பூர்.