

‘அரசு முகாமில் கருத்தடைச் சிகிச்சை பெற்ற 11 பெண்கள் உயிரிழப்பு’ என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அரசு நடத்திய கருத்தடை முகாமில் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதைப் பார்த்தால், அறுவைச் சிகிச்சை செய்தவர் உண்மையான மருத்துவரா என்ற சந்தேகம் எழுகிறது. 5 மணி நேரத்தில் 83 பெண்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்தவர்கள், கின்னஸ் புத்தகத்தில், குறைந்த நேரத்தில் அதிக அறுவைச் சிகிச்சையை நடத்தியவர்கள் என்ற பெயரைப் பெறுவதற்காக இந்த முகாமை நடத்தினார்களா? மருத்துவர்கள் உயிரைக் காப்பவர்கள் என்ற நம்பிக்கை போய், உயிரைப் பறிப்பவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டார்கள். கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என நினைக்கும் பெண்கள், இனி எப்படித் தைரியமாக முன்வருவார்கள்?
- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.