

‘தண்டனை அல்ல; எச்சரிக்கை’ எனும் தலையங்கம், புகைப் பழக்கத்தின் மூலம் விளையும் தீமைகளை எடுத்துரைத்தது. உண்மையில், ஒரு நாளைக்கு உதிரியாகவோ பாக்கெட் பாக் கெட்டாகவோ சிகரெட்டுகளைப் புகைப்பவர்கள், தங்கள் பணம் வீணாகக் கரைவதை உணர்ந் திருக்கிறார்களா என்று தெரியவில்லை. தவிர, புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கான சிகிச்சைக்கு என்று நிறைய பணத்தைச் செலவு செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது. இந்த நிலையில், சிகரெட் விற்பனையில் அரசு கொண்டுவரும் புதிய கட்டுப்பாடு, மக்களின் நலனுக்காகத்தான்.
- ஆர். செல்வகுமரன்,மின்னஞ்சல் வழியாக…