

திருக்குறளை உலகறியச் செய்த மால்கம் ஆதிசேஷையா பற்றிய கட்டுரை அருமை. அவர் ஒரு சிறந்த கல்வியாளர், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்று மட்டுமே அறிந்திருந்த நான் அவர் ஆற்றிய அரும்பணிகளை இந்தக் கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன்.
அறிவொளி இயக்கம், கல்லூரிகளில் பருவமுறைத் தேர்வு ஆகியவற்றைக் கொண்டுவந்தது அவர்தான் என்பது புதிய தகவல். யுனெஸ்கோ மூலம் தமிழையும் தமிழர் பண்பாட்டையும் உலக அரங்கில் உயரச் செய்த அவரது பணி என்றும் போற்றத் தக்கது.
- ரா.பொன்முத்தையா,தூத்துக்குடி.