

நூல்வெளி பகுதியில், ‘கதைகளாக வேண்டிய கட்டுரைகள்’ என்ற தலைப்பில், ‘அழுததும் சிரித்ததும்’என்ற எனது புத்தகம் தொடர்பான விமர்சனத்தைப் படித்தேன். அதில் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ க்வான் யூ, அணு ஆயுதத்துக்கு ஆதரவு அளித்ததாக நான் எழுதியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜப்பான் ராணுவத்திடம் சிங்கப்பூர் சிக்கியபோது, 50,000 சிங்கப்பூர் இளைஞர்களை லாரியில் ஏற்றிச்சென்று சுட்டுக்கொன்றனர் ஜப்பான் ராணுவத்தினர். அந்த அடிப்படையில்தான் ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்டதை லீ க்வான் யூ ஆதரித்தார் என்று நான் எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
- க. பஞ்சாங்கம்,மின்னஞ்சல் வழியாக…