

‘முகத்தில் அறையும் உண்மை’ தலையங்கத்தைப் படித்தேன். அமைதியை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பலமுறை இந்தியா முன்வந்தாலும் அதை பாகிஸ்தான் ஒருபோதும் மதித்ததில்லை. இந்தியாவுடன் சமரசம் செய்துகொண்டால் பாகிஸ்தானிய அரசியல்வாதிகளால் பிழைப்பு நடத்த முடியாது. காரணம், ‘நாம் இந்தியாவிலிருந்து பிரிந்து வந்தவர்கள்; இந்தியர்கள் நமது சகோதரர்கள்’ எனும் மனப்பான்மையை அங்குள்ள மக்களிடம் விதைக்கத் தவறிவிட்டார்கள். ‘இந்தியா நமது பகைநாடு’ எனும் விஷ விதையை விதைத்த பலனை இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமுன் அங்குள்ள தீவிரவாதிகள், ராணுவத்தில் உள்ள பழைமைவாதிகள், மதப் பழைமைவாதிகள் இவர்களை எல்லாம் சமாளிக்க வேண்டும். அப்படியே ஒருவர் தைரியமாக முன்வந்தால் அவர் கொல்லப்படுவார். இதுதான் அவர்கள் சரித்திரம்.
- கேசவ்பல்ராம்,திருவள்ளூர்.