சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதிக்கப்படும் நீதி

சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதிக்கப்படும் நீதி
Updated on
1 min read

‘தி இந்து’ நாளிதழில் (16.11.14) முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் முதலில் வாதாடிய முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, தன்னை ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் என்றும் வழக்கிலிருந்து விலக பாஜக அழுத்தம் கொடுத்தது என்றும் கூறி இவ்வழக்கு இழுத்தடிக்கப்பட்ட விதத்தைப் பற்றித் தனி நூலே எழுதலாம்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பயன்படுத்தி வாய்தா வாங்கினார்கள். அதுபற்றிய நூலுக்கு ‘வாய்தா சட்டம்’ எனப் பெயர் சூட்டலாம். ஆனால், அந்த நூலைப் படித்து எதிர்காலத்தில் குற்றவாளிகள் எளிதில் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று கூறியுள்ளது நாம் கவலையோடு கருத்தில்கொள்ள வேண்டிய விஷயமாகும். அதே நேரத்தில், உச்ச நீதிமன்றமும் இதற்குப் பொறுப்பாகும். இந்த வழக்கில் அன்பழகன், இந்த வழக்கைத் தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் (Transfer Petition (Criminal) Nos.77-78/2003,) உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கர்நாடக மாநிலத்துக்கு மாற்ற உத்தரவிட்டும் இந்த வழக்கு 1997-லிருந்து நிலுவையில் இருப்பதால், தினம் தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று 18.11.2003-ல் உத்தரவிட்டது.

(பக்கம் 19. ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு) ஆனால், அதன் பின்பும் பதினோரு ஆண்டுகள் இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது என்பதுதான் வேதனையான விஷயம். 2ஜி வழக்கில் புலன் விசாரணை தன்னுடைய நேரடிக் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என்று அக்கறை எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா வழக்கிலும் அக்கறையைக் காட்டியிருந்தால் இந்தத் தாமதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

- பொ. நடராசன்,நீதிபதி (பணி நிறைவு), உலகனேரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in