

ஒருவருக்குப் பிறந்த நாள், திருமண நாள் என்றால், அதற்குத் தகுந்தாற்போல் புத்தகங்களைப் பரிசளிப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், அபு இப்ராகிம் என்பவர் தனது வாழ்நாளில் தன்னைச் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் புத்தகம் பரிசளித்தது அல்லாமல், தான் நோயுற்று மருத்துவமனையில் இருக்கும்போது தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கும், தான் மரணமடைந்த பின்னும் தன் குடும்பத்தினரைச் சந்தித்து துக்கம் அனுஷ்டிக்க வந்தவர்களுக்கும் புத்தகப் பரிசு அளிக்க, தன் குடும்பத்தினரையும் தன் வழியில் செயல்படுத்தியது மிகவும் அரிதான ஒன்று.
- ஜீவன்.பி.கே.கும்பகோணம்.