நவரச நவராத்திரி மலர்

நவரச நவராத்திரி மலர்
Updated on
1 min read

உரிய நேரத்தில் நவராத்திரி மலரைத் தாங்கள் வெளியிட்டதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். புராணங்கள், பழங்கால அரசர்கள் எப்படி விழா எடுத்தனர் எனவும், வடநாட்டினர் எப்படிக் கொண்டாடுகின்றனர் எனவும் பல்வேறு செய்திகளை மிக நுணுக்கமாகத் தந்திருக்கிறீர்கள்.

படிகள் அமைக்கும் முறை, பொம்மைகள் வைக்கும் நியதி, ஒவ்வொரு நாளும் கொண்டாடும் முறை என மிக அற்புதமாகவும் தெளிவாகவும் கூறிய விதம் பாராட்டுக்குரியது. ஆச்சி வீட்டுக் கொலுவைப் படித்ததும் என் குழந்தைப் பருவ நினைவுகள் மனதில் நிழலாடின. அழகிய புகைப்படங்கள், அரிதான பொம்மைகள் என ஒவ்வொன்றும் மனதைக் கொள்ளை கொண்டன.

அந்தந்த விழாக்களுக்கு ஏற்றார்போல அதன் சிறப்பை எங்களிடம் கொண்டுசேர்க்கும் 'தி இந்து’ மலருக்கு வாழ்த்துக்கள்.

- பானு பெரியதம்பி,சேலம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in