

மணிப்பூர் மாணவர்களைக் கன்னடத்தில் பேச வற்புறுத்தி பெங்களூரில் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியைப் படித்தேன்.
தாய்மொழிப் பற்று வெறியாக மாறியதன் விளைவே இது. பிற மாநிலத்தவர் பாதுகாப்பாக வந்துபோகும் நிலையிலே ஒரு மாநிலம் இருக்க வேண்டும். இந்தியாவின் தனித்துவம் அப்போதுதான் பெருமையடையும். தாக்கியவர்கள் தங்கள் தாய்மொழியில் பேசாதவர்களைத் தாக்கிவிட்டதாகத் திருப்தி அடைந்திருக்கலாம். ஆனால், உண்மையில் அவர்கள் செயலால் படுகாயம் அடைந்தது, அம்மாநிலத்தவர் மீதுள்ள நம்பகத்தன்மையே!
- கி. நாவுக்கரசன்,ராணிப்பேட்டை.