

கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியாவில் சிலரிடம் செல்வம் குவிந்துகொண்டே இருப்பதும் பெரும்பாலானவர்கள் ஏழ்மையில் உழல்வதும் தொடர் கதையாகிவிட்டது. சட்டவிரோதமாகப் பணத்தைச் சேர்த்தவர்கள் இனி அஞ்சி நடுங்குவார்கள். பல அவநம்பிக்கைகளுக்கு மத்தியில் நீதிமன்றங்கள் அளிக்கும் இதுபோன்ற உத்தரவுகள் சாமானியர்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன.
- தஞ்சை பிரவீண்,மின்னஞ்சல் வழியாக…