

லா.ச.ரா எனச் சுருக்கமாக அழைக்கப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் பற்றிய பிரபஞ்சனின் கட்டுரை சுருக்கமாக, நிறைவாக இருந்தது.
பிரபஞ்சன் குறிப்பிடுவதைப் போன்று லா.ச.ரா. ஒரு சொல்வலை வேட்டுவன்தான். புரியாமல் எழுதுபவர் எனப் பலரால் குறை கூறப்பட்டாலும், எப்போதும் அதுபற்றி அவர் அலட்டிக்கொண்டதே இல்லை. புதிதுபுதிதான சொற்களைத் தன் படைப்புகளில் அறிமுகப் படுத்திக்கொண்டே இருப்பார்.
‘‘சந்தோசமாக இருந்தால் சந்தோசமாக இருப்போம். இல்லை என்றாலும் ஒன்றும் குறைந்து போய்விடப்போவதில்லை”, ‘‘நம்முடைய பிரியத்தை இன்னொருவரிடம் காட்டு வதில்தான் எல்லாம் இருக்கிறது”, “எனக்கு நீ. உனக்கு நான். வாழ்க்கை எனக்களித்த உபதேசம் இதுதான்” எனும் தீர்க்கமான சிந்தனைகளைத் தன் படைப்புகளின் ஊடாக இச்சமூகத்துக்குத் தந்திருக்கும் லா.ச.ரா. உண்மையிலேயே பொருள்வலை வேட்டுவனும்தான்.
- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்