

மனிதர்களுக்கிடையே பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வென்பது என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். ‘மக்களின் தலைவர்’ என்றபோதிலும் தனக்குக் கீழே மண்டியிட்டுத்தான் அமர வேண்டும் என்பன போன்ற அடிமைத் தனங்களுக்கு அஸ்திவாரம் போட்டதே ஆன்மிகவாதிகள்தான் என்கிற உண்மையை விடுதலை ராஜேந்திரனின் கட்டுரை மூலம், சோர்ந்திருந்த ‘சுயமரியாதைப் பிரச்சாரத்தை’ சோம்பல் முறித்துச் சுறுசுறுப்படையச் செய்திருக்கும் ‘தி இந்து’வுக்கு நன்றி!
- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.