

‘தேவை கண்கள் அல்ல’ என்ற கட்டுரை படித்தேன். கட்டுரையைப் படிக்கப் படிக்க இதுபோல் மனிதர்கள் இருக்கக்கூடுமா என்ற ஐயம் மனதில் தோன்றியது. என்ன அருமையான மனிதர் மனோகர் தேவதாஸ்.
பார்வை மங்கியபோதும் மனதில் இருந்த உறுதி காரணமாகத் தன் காதல் மனைவியின் துணையுடன் ஓவியங்களை வரைந்து இந்த உலகத்தில் அழியாத இடத்தைத் தன் படைப்புகளின் மூலம் பெற்றுள்ளார் என்பதைப் பார்க்கும்போது, வாழ்க்கையில் வெற்றிபெற விடா முயற்சி தேவை என்பதை உணர்த்தியுள்ளார். மனைவி இறந்தபோது அவர் தீட்டிய வண்ண ஓவியங்களின் விற்பனை மூலம் பார்வை இழந்தோர்க்கு உதவிய அந்த எண்ணம் எவ்வளவு உயர்வானது.
- ஜீவன்.பி.கே,கும்பகோணம்.