

நோபல் பரிசுகளை ஒவ்வொரு நாளும் அறிவிக்கும்போதும் இந்தியாவின் பெயர் வராதா? என்று ஒருவித ஆதங்கத்துடன் செய்திகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.
அமைதிக்கான நோபல் பரிசை மலாலாவுடன் இந்தியாவின் சத்யார்த்தி பெற்றதும் பெரிதும் மகிழ்ந்தேன். ஆனால், ‘வாழ்த்துக்கள் சத்யார்த்தி, மலாலா’ தலையங்கம் படித்ததும் எனது மகிழ்ச்சி சட்டென்று மறைந்தது. இந்த நோபல் பரிசுக்காக இந்தியர்கள் பெருமைப்படலாம். ஆனால், இந்தியா பெருமைப்பட முடியாது. சிறார் தொழிலாளர்கள்பற்றி இந்தியா என்றைக்குக் கவலைப்பட்டு அதற்கான முயற்சிகள் எடுத்து வெற்றி பெறுகிறதோ அன்றைக்கு நோபல் பரிசைவிடச் சிறந்த பரிசை இந்தியா பெற்றதாகக் கருதி பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
- வீ. சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.