

‘தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம்’ கட்டுரையில் ‘ஐந்து லட்சம் கொடுத்தால், கொடுப்பவர் பெயரால் கல்லூரி ஆரம்பிக்கப்படும் என்ற பக்தவத்சலம் காலத்துத் திட்டத்துக்கு “இது நல்ல திட்டம். ஆனால், பணத்துக்கு எங்கே போவேன்? திருச்சியில் எனக்கு இருக்கும் நிலத்தைத் தருகிறேன். ஒரு கல்லூரி தொடங்குங்கள்’’ என்று தந்தை பெரியார் கொடுத்ததாக ஒரு குறிப்பு வருகிறது.
நிலத்தோடு ரூ. 5.5 லட்சம் பணத்தையும் தந்தை பெரியார் அளித்தார். அதன் மூலமே திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி தொடங்கப்பட்டது. அந்தக் கல்லூரி தொடக்க விழாவில் தந்தை பெரியாரும் அன்றைய முதலமைச்சர் மு. பக்தவத்சலமும் பங்குகொண்டனர்.
கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்.