

தி.மு.க. கூட்டணி 1967 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்நாளைய முதலமைச்சர் எம். பக்தவத்சலம் தெரிவித்த கருத்து, ‘விஷக் கிருமிகள் பரவிவிட்டன’ என்பதாகும்.
அன்றைக்கு இதைக் கேட்ட அனைவரும், ‘காங்கிரஸ் காரர்களுக்குத் தோல்வியை ஏற்றுக்கொள்கிற பக்குவம் இல்லை, வயிற்றெரிச்சலில் இப்படிப் பேசுகிறார்கள்' என்றுகூட நினைத்திருப் பார்கள். ஊழல், சாதியம், குடிவெறி, அரசு அலுவலகங்களில் அளவற்ற லஞ்சம், இயற்கை வளங்கள் சூறை யாடல், கல்வி வழங்கலில் வியாபாரக் கண்ணோட்டம் ஆகியவைதான் இன்றைய தமிழகம். பக்தவத்சலம் விரக்தியில் பேசவில்லை என்பதும் இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருக்கிறார் என்பதும் இப்போது புரிகிறது.
- ரங்கநாதன்,திருநின்றவூர்.