

பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மறைவுகுறித்த செய்தி அறிந்தேன். மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினர், சிறந்த கல்வியாளர், எழுத்தாளர், தொழிலதிபர், பத்திரிகையாளர், ஆன்மிகவாதி, தமிழ் ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் மூலம் கோவை மாவட்டப் பகுதியில் வேளாண் மக்களுக்கு வாழ்வளித்தவர். சமய நூல்கள் பலவற்றைச் சலுகை விலையில் பதிப்பித்து, பலரும் படித்துப் பயன் பெற வைத்தவர். அருட்பிரகாச வள்ளலார் அடியொற்றி சைவ நெறி காத்த பெருமகனார். தமது ராமலிங்கர் பணி மன்றத்தின் மூலம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளலார் காந்தி விழாவை நடத்தி வந்த காந்தியவாதி, 91 ஆண்டுகள் வாழ்ந்து, காந்தி பிறந்த நாளன்று இவ்வாண்டு விழாவின் துவக்க நாள் நிகழ்ச்சியிலேயே இயற்கை எய்திய செய்தி வியப்புக்குரியதே!
- வீ.க. செல்வக்குமார்,சென்னை.