

‘வாழ்த்துக்கள் சத்யார்த்தி, மலாலா!’ தலையங்கம் வாசித்தேன். இந்தியாவில் இன்னமும் சிறார் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தி வேதனை தந்தது.
அவர்களின் உரிமைக்காகப் போராடும் சத்யார்த்தியின் சேவையையும், பெண் கல்விக்காகக் குரல் கொடுக்கும் மலாலாவின் சேவையையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப் பட்டிருக்கிறது. உண்மையில் இந்தியா/பாகிஸ்தான் இரண்டுக்கும் இதனால் தலைகுனிவுதானே தவிர, பெருமைப்பட்டுக்கொள்ள ஏதுமில்லை.
- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.