

தனது கட்சியான காங்கிரஸால் மறக்கப்பட்ட ஒரு தலைவரை இளம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய இந்துவுக்கு நன்றி. கிளைச் செயலாளர்களே சிவப்பு விளக்கு சுழல உலா வருவதைப் பார்க்கிறோம்.
ஆனால், முதலமைச்சரான பக்தவத்சலம் எவ்விதமான ஆடம்பரமும் இன்றி, பொது விழாக்களுக்கு வந்து செல்வார். பக்தவத்சலம் போன்ற தன்னலமற்ற தலைவர்கள் தற்சமயம் தமிழகத்தில் இல்லாதது தமிழகத்துக்குப் பேரிழப்பே.
- ஜே ராஜகோபாலன்,நெய்வேலி.