

‘இந்தியாவை உருவாக்கி விற்கப்போகிறோமா... இந்தியாவை அறுத்து விற்கப்போகிறோமா?’ கட்டுரை சுளீர்.
இந்தியாவை ஒரு உற்பத்திக்கூடமாக மாற்றப்போகிறேன் என மோடி சூளுரைக்கிறார். உற்பத்தி செய்யும் நிறுவனங்களான ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ், ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்களை மூடிவிட்டு, தனியாரைக் கொண்டு உற்பத்தி செய்யப்போவது தனியாரின் லாபத்துக்கே. ‘‘நான் குஜராத்தி... எனது ரத்தத்தில் வணிக ரத்தமே ஓடுகிறது...” எனக் கூறி, தனியார் / அந்நிய நிறுவனங்களைக் கூவிக்கூவி அழைப்பது, இந்தியாவைக் கொள்ளையடிக்கவே என்பதுபோல் தோன்றுகிறது. எந்தத் தனியாரும் இந்தியாவை வளப்படுத்துவதற்காக இங்கு தொழில் தொடங்கப்போவதில்லை. கொள்ளை லாபத்துக்காகவே இங்கு வரப்போகிறார்கள். அவர்களுக்கு வசதியாகத் தொழிலாளர் நலச் சட்டங்கள் உட்பட, பல சட்டங்களைத் திருத்துவது நாட்டைக் கூறுபோட்டு விற்கவே வழிவகுக்கும். இந்தக் கட்டுரை நிச்சயம் மோடி குறித்த மாயையை உடைக்கும்.
- சே. செல்வராஜ்,தஞ்சாவூர்.