இப்படிக்கு இவர்கள்
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது
‘தீபாவளியைத் துறந்த கிராம மக்கள்’ மற்றும் ‘பட்டாசு வெடிக்காத கிராமம்’ இரு கட்டுரைகளும் அருமை. பெரியவர்களாலேயே கொண்டாட் டங்களைத் துறக்க ஆசைப்படுவது முடியாத காரியம். சின்னஞ்சிறு பிள்ளைகள் புத்தாடை உடுத்தாமலும் பட்டாசு வெடிக்காமலும் இருக்கின்றனர் என்பதே பெரிய விஷயம். அதைவிட, பறவைகள் நலனை மனதில் வைத்து கிராமத்து மக்கள் எத்தனை அரிய செயலை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர்! கிராமங்களில்தான் இந்தியா இருக்கிறது என்பது எவ்வளவு உண்மை.
- தீப. நடராஜன்,தென்காசி.
