இன்னும் எத்தனையோ

இன்னும் எத்தனையோ
Updated on
1 min read

‘காஷ்மீரில் தர்பார் நடைமுறை’ என்ற 141 ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் தலைநகரை மாற்றும் நடைமுறை பற்றிய செய்தியைப் படித்தேன். அறிவியல் வசதிகள் ஏதுமில்லாத காலத்தில், இந்த முறை 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்துள்ளது.

இப்போது கிடைத்துள்ள விதவிதமான புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டு, தலைமைச் செயலகத்தின் தட்பவெப்ப சூழ்நிலையையே முற்றிலும் மாற்றிவிடலாம். இடத்தை அடிக்கடி மாற்றாமல், ஒரே இடத்தில் தலைமைச் செயலக அலுவலகங்களை நடத்துவதன் மூலம் தேவையற்ற வீண் செலவுகளையும், நேர விரயத்தையும் குறிப்பாக, கோப்புகள் காணமல் போவது போன்ற நடவடிக்கைகளையும் எளிதில் தீர்க்கலாம். நம் இந்தியாவில் மாற்றப்பட வேண்டிய பழைய நடைமுறைகள் இதுபோல் இன்னும் எத்தனையோ உள்ளன.

- பி. ஆறுமுகநயினார்,தச்சநல்லூர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in