

அபத்தமான கட்டுரை. ஒரு நாடு முன்னேற முதலீடு அவசியம். இன்றைய சுழலில் அமெரிக்காவைவிட 65 மடங்கு பின்தங்கி உள்ளோம் நாம் (1 டாலர் = 65 ருபாய்). நம்மால் எப்படி எல்லோருடனும் போட்டி போட முடியும்? அதற்குத் தேவை மூலதனம். “நீ முதல் போடு; இந்தியாவில் உற்பத்தி செய்; எங்கு வேண்டுமானாலும் விற்றுகொள்” என்பது நல்ல வியாபாரத் தந்திரம். 125 கோடியாகிவிட்டது நம்முடைய மக்கள்தொகை. நமது தேவை கூடகூட நமது அணுகுமுறையும் மாற வேண்டும். கம்யூனிஸத்தின் கோட்டையாக இருந்த ரஷ்யாவும் சீனாவுமே முதலாளித்துவம்பற்றிப் பேசும்போது, நாம் முதலீடுபற்றியே பேசக் கூடாது என்பது அபத்தம்!
- கிருஷ்ண ஐயர்,‘தி இந்து’ இணையதளம் வழியாக...