

‘தூர்தர்ஷன் செய்திகள் யாருக்காக?' (30.09.2014) என்ற தலையங்கமும் மற்றும் 4.10.2014 இதழில் வெளியான பொதிகை தொலைக்காட்சி செய்தி இயக்குநரின் விளக்கமும் படித்தேன்.
பொதிகை தொலைக்காட்சி பற்றிய தங்களுடைய தலையங்கத்தில் உள்ள ஒரு செய்திக்கு மட்டும் விளக்கம் கொடுத்து ‘நியாயமா?’ என்று கேட்டிருக்கிறார் இயக்குநர். அப்படியானால், மற்ற குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாரா? முதல் நாள் எத்தனை முறை செய்தி சொல்லியிருந்தாலும், இரவில் தூங்கி காலையில் கண்விழித்தவுடன் முதல் நாள் நடந்த நிகழ்வின் தொடர்ச்சியை அறியவே மக்கள் விரும்புவார்கள் என்பது இயக்குநருக்குத் தெரியாதா?
தினம்தோறும், பொதிகையில் செய்தி பார்ப்பவன் என்கிற முறையில் சொல்கிறேன், செய்திக்குத் தொடர் பில்லாத காட்சியை ஒளிபரப்புவது அவர்களுக்கு ஒன்றும் புதிதில்லை. விமர்சனங்கள் நல்ல மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
- ஜேவி,சென்னை.