

‘மெல்லத் தமிழன் இனி’ தொடர், பலருக்கு விழிப்புணர்வைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. மதுபானத்தின் பேராபத்து தெரியாமல் அந்த வலையில் விழுந்து வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஏராளம். மதுவின் போதையில் வாழ்க்கையை இழந்தவர்களின் கதைகளைப் படிக்கவே நெஞ்சம் பதறுகிறது. அதேசமயம், அந்த நரகத்தில் வீழ்ந்து பின்பு அதிலிருந்து மீண்டவர்கள் குறித்த தகவல்களும் நம்பிக்கை தருகின்றன. மது அரக்கனிடமிருந்து தப்பிக்க நினைப்பவர்களுக்கு இந்தத் தொடர் ஒளிவிளக்காக இருக்கும்.
- ஜீவன்.பி.கே.கும்பகோணம்.