

பழ. அதியமான் எழுதிய ‘சத்தியம் என்றொரு போராட்ட ஆயுதம்' கட்டுரை படித்தேன். அடிகள் என்பது துறவிகளைக் குறித்தாலும் காந்தியடிகளைப் பொறுத்தவரை நாட்டுக்காக உயிர் வரை அனைத்தையும் துறந்தவர் என்பதால், மிகவும் பொருந்தும்.
இதனாலேயே உத்தமர் காந்தி சத்தியமூர்த்தி எனவும் புகழப்பட்டார். ஆனால், சத்தியமூர்த்தியாம் காந்தியின் வழியைப் பின்பற்றுவதாய்க் கூறும் எவரும் சத்தியத்தைச் சிறிதும் கடைப்பிடிப்பதில்லை. சத்தியம் பெயரளவில் மட்டுமே இருக்கிறது என்பதை கட்டுரை மூலம் அறிய முடிந்தது. சோதனை வரும்போது மட்டுமே சத்தியம் நமக்கு நினைவுக்கு வருகிறது. சத்தியம் எப்போதும் நம் நினைவில் இருந்தால் சோதனை நம்மை சோதித்துப் பார்க்காது என்பதை இளைய தலைமுறையிடம் கொண்டுசேர்க்க வேண்டியது நமது கடமை.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.