கருணையற்ற சுரண்டல்

கருணையற்ற சுரண்டல்
Updated on
1 min read

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்கங்கள் இணைந்து, 2001-ல் மத்திய அரசின் உதவியோடு ஒரு குழுவை அனுப்பி சீனாவில் உள்ள நிலைமையைக் கண்டு அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னது.

இந்த முடிவை இந்திய அரசு எடுத்ததே மிகவும் தாமதமாகத்தான். 1990-ல் உலக நாடுகளில் பலவும் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்துவிட்டு, 10 ஆண்டுகளில் மிகப் பெரிய பொருளாதார மாற்றத்தைத் தங்கள் நாடுகளில் எதிர்பார்த்துக் காத்திருந்தன. ஆனால், மூன்றாம் உலக நாடுகளில் உள்ள இயற்கை வளங்களையெல்லாம் சுரண்டிவிட்டு, எல்லா தொழிலாளர் நலக்கொள்கைகளையும் காலில் போட்டு மிதித்ததுதான் மிச்சம்.

ஆனால், 1990-ல் அன்று சீனத் தலைவரான டெங்சியோ பிங் உலக வர்த்தக ஒப்பந்தங்களால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என தொழிலாளர் மாநாட்டிலும் விவாதித்து இறுதிப்படுத்தி, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அதன் சாதக பாதக அம்சங்களை விளக்கிப் பிரச்சாரம் செய்தார்.

பின்னர், 1990-லிருந்து சீன மக்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களையெல்லாம் உற்பத்தி செய்து, நாட்டு மக்களுக்குக் குறைந்த செலவில் வியோகித்த பிறகு, 2000-ல் தான் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதுவும் சீனாவில் இல்லாத தொழில்நுட்பத்தை மட்டுமே பல்வேறு நிபந்தனைகளுடன் இறக்குமதி செய்தார்கள். ஆனால் இந்தியாவில், 25 வருடங்களாக உழைக்கும் மக்களைச் சுரண்ட பல நாடுகளை அனுமதித்துவிட்டோம். பன்னாட்டு முதலாளிகள் லாபத்தைத் தானே எதிர்பார்த்து வருவார்கள். கருணைகாட்டவா வரப்போகிறார்கள்?

- சோ. சுத்தானந்தம்,சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in