

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் தலையிட்டு, அவரை பெங்களூர் சிறையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவை கடிதம் அனுப்பியுள்ளது’ என்ற செய்தியைப் படித்து ஆச்சரியப்பட்டேன்.
ஒரு நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டு, பிணைக்காக விசாரணை நிலுவையில் இருக்கும்போது, அந்த நீதிமன்ற நடவடிக்கையில், குடியரசுத் தலைவரோ பிரதமரோ தலையிட முடியாது என்கிற அடிப்படையான பொதுஅறிவுகூட இல்லாத நிலையில் ஆசிரியர்கள் இருக்கிறார்களே என்ற வேதனைதான் ஏற்பட்டது. ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்று நாம் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ‘எதுவும் தெரியாதவன் ஆசிரியனாகும்’ என்று சொல்ல வேண்டிய நிலைக்கு நாம் ஆளாக்கப்பட்டுவிட்டோமோ என்ற அச்சம் எழுகிறது. இது போன்ற ஆசிரியர்களிடம் பயிலும் மாணவர்களின் கதி என்னவாகும் என்று நினைக்கும்போது பதற்றமும் பயமும் ஏற்படுகிறது.
- பொ. நடராசன், நீதிபதி (பணி நிறைவு),உலகனேரி.