

ஒரு நாட்டின் உற்பத்தி வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் முக்கியமான அடிப்படை, தொழிலாளர் நலனே. அதைக் கருத்தில்கொண்டு, நமது பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டுள்ள ‘தீனதயாள் உபத்யாய ஜெயந்தி’ திட்டம் வரவேற்கத் தக்கது. ‘சிராம் சுவித’ இணையம் மூலம் 16 சட்டங்களுக்குப் புகார் அளிக்கும் வசதி இருப்பதால், தொழிலாளர்கள் தங்கள் குறைகளை எளிதாகப் பதிவுசெய்ய முடியும். மேலும், ‘புதிய ஆய்வு’ திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் உண்மைத் தரம் ஆய்வாளர்களின் தலையீடு இல்லாமல் நேரடியாகத் தெரியவரும். இதுபோல் இன்னும் பல திட்டங்கள் வந்தால் நம் நாட்டுக்கு நன்மையே.
- பா. சாதனா,மின்னஞ்சல் வழியாக…