

அரசியல்வாதிகளைக் குற்றம் சொல்லும் நாம் யோக்கியவான்களாக இருக்கிறோமா எனும் கேள்வியைக் காட்டமாக எழுப்பியிருந்த >‘எங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா?' கட்டுரை அவசியமான ஒன்று.
‘அடிப்படையில் அரசியல்வாதிகள் எல்லாம் யார்? உடைத்துப்பார்த்தால் எல்லாம் நாம்தான்!’ எனும் வரிகளில் நொறுங்கிப்போனேன். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதை அநியாய வணிகமாக்க முயன்றவர்களை நாம் எப்படி விளிப்பது? நாம் கட்டுரையாளரின் அறச் சீற்றத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.