

‘ஒரு நூலகத்தின் கதை’ - ‘நம்மாழ்வார் விவேகா அபிவிருத்தி நூல்நிலையம்’ குறித்த கட்டுரை அருமை. வ.உ.சி. பேரவைக்கு என் பாராட்டுகள். நாம் படித்த பள்ளியில் நூலக வசதி இருந்திருப்பின், நம்மில் பலர் படிக்கும் பழக்கத்தை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்திருப்போம்.
மக்கள், நூலகத்தை விட்டு விலகி சினிமா, தொலைக்காட்சி பக்கம் சாய்வதற்குக் காரணம் மக்களுக்குப் புத்தக வாசிப்பின் அருமை தெரியாததுதான். நூலகங்கள் அமைப்பது ஒரு நல்ல மூலதனம் என்பதை அரசும் மக்களும் உணர வேண்டும். ‘என்னைத் தலை குனிந்து பார், நீ தலை நிமிர்ந்து வாழ்வாய்’ என்ற வாசகம் நூல்களின் அருமையை நன்கு உணர்த்தும்!
- இரா. ரமேஷ் குமார்,அமராவதிநகர்.