

ராஜம் கிருஷ்ணன் - எழுத்தே வாழ்வாகக் கொண்ட அற்புதமான எழுத்தாளர். குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு ஏழைகளைப் பற்றி எழுதியவரல்லர். உப்பளத் தொழிலாளர் வாழ்வை அவர்களுடன் வாழ்ந்து வலிகளை அனுபவித்து கண்ணீரின் கரிப்பில் ‘கரிப்புமணிகள்’ எழுதினார். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எண்பதுகளிலேயே தன் படைப்புகளில் பதிவுசெய்தவர் ராஜம் கிருஷ்ணன். பாரதியை ஆழமாகப் படித்து அன்று அவர் எழுப்பிய பல வினாக்களுக்கு இன்றும் விடை தர முடியா நிலையில் அவர் நம்மைக் கடந்து அப்பால் போய்விட்டார். லட்சிய வாழ்வின் முகம் இப்போது அவர் விட்டுச்சென்ற படைப்பிலக்கியங்கள்தான்.
- முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.