

சமத்துவத்தைப் பற்றி ஒரே ஒரு மாமனிதர் மட்டுமே பேசியிருக்கிறார். அந்த மாமனிதர் புத்தர்தான் என்று அம்பேத்கர் சொன்னதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள்.
இஸ்லாம் மார்க்கத்தின் தூதரான நபிகள் நாயகம் முஹம்மது நபி, ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து சமத்துவத்தை ஏற்படுத்துவதில் உலகின் அனைத்துத் தலைவர்களைவிடவும் பெரிய அளவிலான வெற்றியைக் கண்டவர். அவர் காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களான நீக்ரோக்களுக்கு அரபிகளுடன் சம அந்தஸ்தை வழங்கினார்.
அடிமைகளை விலை கொடுத்து வாங்கி, விடுதலை செய்வதை மதத்தின் மிக உயர்ந்த வணக்கமாகக் குறிப்பிட்டார்கள். அதைச் செயல்படுத்திய நாயகத் தோழர்கள் அடிமைகள் இல்லாத அரேபியாவை உருவாக்கினார்கள். முஸ்லிம்களின் புனித வணக்கங்களான தொழுகை, ஹஜ் முதலானவற்றில் ஜனாதிபதியும் ஏழைக் குடிமக்களும் பண்டிதரும் பாமரரும் கருப்பரும் வெள்ளையரும் ஒன்றிணைந்து நிற்கும் நிலையை ஏற்படுத்தினார்கள். நபி அவர்களின் சமத்துவப் புரட்சி பதினான்கு நூற்றாண்டுகளைத் தாண்டி இன்னும் உலகெங்கும் நடைமுறைப்படுத்துவதைப் பார்க்கிறோம்.
தாஜூத்தீன்,திருவிதாங்கோடு.