தேரிக்காடும் செம்மூதாயும்

தேரிக்காடும் செம்மூதாயும்

Published on

‘கலை இலக்கியம்’ பகுதியில் வெளியான ‘கதை சொல்லிக்கு விளக்கு விருது’ கட்டுரையில் கோணங்கி பற்றி வாசித்தபோது எனது இளமைக் காலங்களை நினைவுபடுத்தியது.

அவரைப் பார்த்த அந்த முதல் நாள்… செம்மண் நிறைந்த தேரிக்காடு… அங்கு நடைபெற்ற செம்மூதாய் நாடகம். ஒரு சாதாரண மனிதர்போல அங்கு நின்றிருந்தவர் யார் என்று அப்போது எனக்குத் தெரியாது. முகம் முழுவதும் புன்னகையுடன் சிலரோடு உரையாடிக்கொண்டிருந்தார்.

அங்கு சில பெரிய மனிதர்களும் சாதாரண மக்களும் இருந்தனர். அனைவரிடமும் ஒரே மாதிரியாகப் பேசியது எனக்கு வியப்பளித்தது. மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது, இவரது சில படைப்புகளும் பாடமாகக் கற்பிக்கப்பட்டபோது மேலும் மேலும் அந்த வியப்பு விரிவடைந்துகொண்டே சென்றது.

- ம. மணிகண்டன்,கிடாத்திருக்கை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in