

எஸ். ராவின் ‘வீடில்லாத புத்தகங்கள்’ வாசித்தேன். தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்விச்சாலைகளின் நூல் பயிற்சி வருந்தத் தக்க நிலையில்தான் உள்ளது.
மேலை நாடுகளில் குறிப்பிட்ட சில புத்தகங்களை முன்வைத்து வாசிப்புத் திருவிழா நடத்துவது உண்டு. அதைப் போலவே எங்கள் பள்ளியில், பாரதிதாசன் புத்தக வங்கியை உருவாக்கினோம்.
மாணவர்கள் தங்களிடம் உள்ள நூல்களை வங்கியில் ஒப்படைத்து, வங்கியில் உள்ள பிற நூல்களை எடுத்துப் படிக்கலாம். பின்னர் விருப்பப்பட்டால் அவர்கள் நூல்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதில், மாணாக்கர்களே வங்கியின் முழுப் பொறுப்பாளர்கள். மாணவ - மாணவிகளின் வாசிப்புத் திறனை வளர்க்கவும், புத்தகங்கள் சேகரிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும் இந்தப் புத்தக வங்கி பயன்படுகிறது.
- இரா. இலக்குவன்,கொங்கராயக்குறிச்சி.