

காவேரிப்பட்டினம், பென்னேஸ்வர மடம் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 700 ஆண்டு பழைமையான பென்னேஸ்வரர் கோயிலில் காணப்படும் கல்வெட்டு, ‘மன்னன் உட்பட அதிகாரிகள் உட்பட யார் குற்றம் செய்தாலும் மரண தண்டனை’ என பிற்கால போசாள மன்னன் வீர ராமநாதன் விதித்த ஆணையைத் தாங்கி நிற்கிறது.
18 ஆண்டுகள் நடந்துவரும் வழக்கையே மறந்திருக்கும் மக்களுக்கு 700 ஆண்டுகளுக்கு முந்தைய சமூகத்தில் விதிக்கப்பட்ட சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ‘தி இந்து’ வெளியிட்டுள்ளது அருமை. அதுபோல் தற்போது ஊழல் வழக்கில் ஆட்சியாளர்கள் மட்டும் தண்டனை அனுபவித்துவருகிறார்கள். அவர்களால் ஆட்டுவிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு தண்டனை அளிக்கப்படவில்லை என்பது வருந்தத் தக்கது. சட்டம் அவர்களுக்கு மட்டும் ஏன் தயவளிக்கிறது?
- கி. ரெங்கராஜன்,சென்னை.