

‘இந்திய மாணவர்களுக்குத் தவறான பாடம்’ கட்டுரை படித்தேன். ‘தி நியூயார்க் டைம்ஸ்’ மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரின் நினைப்பும் அதுவே. ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய மெக்காலே கல்வி குமாஸ்தாக்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்பும் இந்தக் கல்வி முறையிலிருந்து நம்மால் விடுபட முடியவில்லை. இப்போது இவர்கள் புதிதாகக் கிளம்பி யிருக்கிறர்கள். இந்தப் புதிய பாடத்திட்டம் எத்தகையவர்களை உருவாக்கப்போகிறது? தேசம், தன் முன்னங்காலை ஒரே சமயத்தில் இருபத்திரண்டாம் நூற்றாண்டிலும் பின்னங்காலை பதினாறாம் நூற்றாண்டிலும் வைத்திருக்க முடியாது.
- பி. சந்தானகிருஷ்ணன்,தஞ்சாவூர்.