

ஜெயலலிதா சந்தித்துள்ள இந்தப் பிரச்சினை இதுவரை இந்தியாவில் யாரும் சந்திக்காதது அல்ல. இதற்கு முன்னரே லாலு இந்த மாதிரி பிரச்சினையைச் சந்தித்து சீனியர் அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள், ஜெயலலிதாவை மையப்படுத்தி செய்திகள் வெளியிடு வதை இன்னும் கைவிடவில்லை. அதேபோல் கருணாநிதியையும் மையப்படுத்தாமல் அரசியல் நிகழ்வுகள் இல்லையென்பது போல் ஊடகங்கள் செயல்படுகின்றன. சட்டத்தை மீறிய செயலுக்கு ஏற்ற தண்டனை என்பதை யாரும் வலியுறுத்தக் காணோம். செயல்படாத அரசு ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. அதைப் பற்றி யாருக்கும் அக்கறை காணோம்.
- ஜீவன்.பி.கே.கும்பகோணம்.