

‘மெல்லத் தமிழன் இனி’ (22.10.14) கட்டுரை படித்தேன். அதில் பணம் சேமித்து மதுபானம் வாங்கும் முறை பின்பற்றப்படுவது குறித்த தகவல் அதிர்ச்சி அளித்தது. ஒரு கூலித்தொழிலாளியை சந்தோஷப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு, அவர் உயிருக்கு உலைவைப்பதும், மனிதாபிமானம் இல்லாமல் அவரது சொற்ப வருமானத்தில் சுரண்டிப் பிழைப்பதும் சரியா? இதற்குப் பெயர் சேமிப்பா? எங்கே போய்க்கொண்டிருக்கிறது மனிதம்? ‘சேமிப்பு’ என்ற உன்னதமான சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் இவர்கள்.
- ம. மீனாட்சிசுந்தரம்,மின்னஞ்சல் வழியாக…