

‘நலம் வாழ’ இணைப்பில் ‘மூட்டுவலி: முதலுக்கே மோசம்’ என்று எல்லோருடைய முக்கிய பிரச்சினையான மூட்டுவலி பற்றி மிகத் தெளிவாக விளக்கிச் சொன்னது அருமை. அந்தக் காலத்தில் ஏன் மூட்டுவலி இல்லை. இன்று சிறியவர்களைக் கூட இந்த மூட்டுவலி தாக்குவது எதனால் என்று விளக்கியதுடன், அதிலிருந்து எப்படி விடுபடலாம் என்று சொன்னது பயனுள்ள செய்தி.
முன்னோர்களுக்கு இருந்தால் மட்டுமே பாரம்பரியமாக வந்த இதுபோன்ற மூட்டுவலி, இன்றைய தலைமுறையினருக்கும் வருவதற்குக் காரணம், பகலில் ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து வேலை பார்ப்பதோடு, மாலையிலும் வீட்டில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து டி.வி. பார்ப்பது என்ற செய்தியைப் பிரசுரித்து, மக்களின் கண்களைத் திறக்க உதவிய ‘நலம் வாழ’ பகுதிக்குப் பாராட்டுகள்.
- உஷாமுத்துராமன்,திருநகர்.