

கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா? கட்டுரை பற்றி… ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமான தி காக்ரேன் கொலாபரேஷன் தெரிவிப்பதன்படி, இத்தனை பரிசோதனைகள் செய்யப்படுவதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், குறிப்பிட்ட சில நோய்களால் அவதிப்படுபவர்களின் பிரச்சினைகள் தீர்வதில்லை என்றும் சொன்ன அந்த நிறுவனத்தின் கூற்று முற்றிலும் உண்மையே. அதனால், மருத்துவர்களைக் கடவுளாகப் பார்த்த காலங்கள் மாறி, அப்பாவிப் பொதுமக்கள் மருத்துவமனை செல்வதற்கே அச்சப்படும்படியான சூழல் உருவாகிவிட்டது.
தேவையில்லாமல் முழு உடல் பரிசோதனை, அதிக விலையில் மருந்து மாத்திரைகள் என மக்களிடையே எப்படிப் பணம் பிடுங்குவது என்ற ஒற்றைக் குறிக்கோளுடன்தான் பெரும்பாலான மருத்துவமனைகள் இயங்குகின்றன; மருத்துவர்கள் பணிபுரிகின்றனர் என்பதே நடைமுறை. காலத்துக்கேற்ற அழகான பதிவு இக்கட்டுரை.
- ஜி. சுரேஷ்குமார், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…